முன்னாள் பொலிஸ் மா அதிபர் வீட்டில் கொள்ளை; மனைவியின் தலையணையின் கீழிருந்த நகைகளும் அபேஸ்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பாணந்துறை வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளன.
வீட்டின் முன் நுழைவாயில் பகுதியில்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் இருந்த போதும், திருடர்கள் மற்றொரு வாயிற் பகுதி ஊடாக, குறித்த வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர்.
பாதுகாப்பாக வங்கியில் வைத்திருந்த நகைகளை திருமண வீடொன்றுக்குச் செல்வதற்காக எடுத்து வந்த முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மனைவி, அதைத் தலையணையின் கீழ் வைத்து உறங்கிய நிலையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாணந்துறைப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.