பாடசாலை மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

🕔 May 9, 2016

Wall - 04– க. கிஷாந்தன் –

துளை – லுணுகல அல் அமீன் முஸ்லிம் வித்தியாலத்தின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகல பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

பாடசாலையில் மேலதிக வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லுணுகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Wall - 03Wall - 02Wall - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்