Back to homepage

மேல் மாகாணம்

கொஸ்கம; 1000 கோடி இழப்பு

கொஸ்கம; 1000 கோடி இழப்பு 0

🕔7.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 1000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் அழிந்து போனதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வெடிவிபத்தினால், 09 ஆயிரம் தொன் வெடிபொருட்கள் முற்றாக நாசமாகின. இதன் பெறுமதி 10 பில்லியன் (1000 கோடி) ரூபாவாகும். இந்த வெடிபொருள் கிடங்கு சரியான நிபுணத்துவத்துடன் அமைக்கப்படவில்லை என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கொஸ்கம

மேலும்...
கொஸ்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி

கொஸ்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி 0

🕔7.Jun 2016

கொஸ்கம சாலாவ ராணுவ முகாம்ஆயுதக் களஞ்சியசாலையில்  ஏற்பட்ட தீ விபத்தினால், பாதிக்கப்பட்ட பூகொட குமாரிமுல்ல மக்களுக்கான குடிநீர் தேவையினை, தனது சொந்தப் பணத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் நிறைவேற்றிக் கொடுத்தார்.கொஸ்கம வெடி விபத்தின் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி, விகாரையிலும் வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த மக்களை நேற்று  திங்கட்கிழமை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.

மேலும்...
கோட்டாவுக்கு கட்சியில் பதவிகள் வழங்கினால், அரசிலிருந்து விலகி விடுவேன்; சந்திரிக்கா எச்சரிக்கை

கோட்டாவுக்கு கட்சியில் பதவிகள் வழங்கினால், அரசிலிருந்து விலகி விடுவேன்; சந்திரிக்கா எச்சரிக்கை 0

🕔7.Jun 2016

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பதவியொன்றினை வழங்கி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்வாங்கிக் கொள்ளுமாயின், இந்த அரசுடன் – தான் தொடர்ந்தும் இருக்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தனகல பிரதேசதத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்த பின்னர் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். “நாட்டினைச் சூரையாடுவதை

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பு தலைமை அதிகாரியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை

மஹிந்தவின் பாதுகாப்பு தலைமை அதிகாரியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை 0

🕔7.Jun 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி, குற்றப் புலனாய்புத் திணைக்களத்துக்கு இன்று செவ்வாய்கிழமை காலை ஆஜராகியுள்ளார். மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணையொன்று தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு – இவர் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேஜர் நெவில் வன்னியாராச்சியிடம் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு,

மேலும்...
முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேயிடம் விசாரணை

முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேயிடம் விசாரணை 0

🕔7.Jun 2016

கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேயிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று செவ்வாய்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெறுகிறது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், நீதவான் திலின கமகே இன்று செவ்வாய்க்கிழமை காலை குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி வைத்திருந்த காரணத்தால்,

மேலும்...
சரத் பொன்சேகா அரசியல் அறிவற்றவர்; அமைச்சர் ஜோன் செனவிரட்ன பதிலடி

சரத் பொன்சேகா அரசியல் அறிவற்றவர்; அமைச்சர் ஜோன் செனவிரட்ன பதிலடி 0

🕔7.Jun 2016

முன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா எவ்விதமான அரசியல் அறிவும் அற்றவர் என்று அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒருவருடன் அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருப்பதை நினைக்கையில் வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார். தொழில் அமைச்சில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பா அமைச்சர் மேலும்

மேலும்...
கொஸ்கம சம்பவத்தில் 70 ஆயிரம் தனி விபரக் கோப்புகள் நாசம்

கொஸ்கம சம்பவத்தில் 70 ஆயிரம் தனி விபரக் கோப்புகள் நாசம் 0

🕔6.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாமில் ஏற்பட்ட வெடி விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் தனி விபரக் கோப்புகள் நாசமடைந்துள்ளதாக ராணுவத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இலங்கை ராணுவத்தின் தொண்டர் படையினருடைய தனி விபரக் கோப்புகளே இவ்வாறு அழிவடைந்துள்ளன. மேற்படி கோப்புக்களை மீட்டெடுப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது. கொஸ்கம

மேலும்...
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய கடமையேற்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய கடமையேற்பு 0

🕔6.Jun 2016

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய இன்று திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவராவார். டென்மார்கினை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். ரங்க கலன்சூரிய – ஊடகவியலாளரும் பிரபல எழுத்தாளருமான காலஞ்சென்ற சோமாதேவி பரணயாப்பாவின்

மேலும்...
ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 02 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் பஸில் விடுதலை

ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 02 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் பஸில் விடுதலை 0

🕔6.Jun 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு பூகொட நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. காணி கொள்வனவு ஒன்றின் மூலம் பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில், இன்று திங்கட்கிழமை – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பஸில் ராஜபக்ஷவை கைது செய்து பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். இதன்போது, ஒரு லட்சம்

மேலும்...
பாதுகாப்பான பகுதியாக இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது; ராணுவ பேச்சாளர்

பாதுகாப்பான பகுதியாக இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது; ராணுவ பேச்சாளர் 0

🕔6.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாமின் அண்மித்த பிரதேசத்தை பாதுகாப்பான பகுதி என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என்று ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக ஏற்பட்ட தீ  முழுமையாக அணைக்கப்பட்ட போதும்,  ஆயுத களஞ்சியத்திலிருந்து  தொடர்ந்து வெடிப்பு சத்தங்கள்  கேட்டுக்கொண்டிருப்பதாக அவர் கூறினார். ராணுவ

மேலும்...
கொஸ்கம பகுதிக்கு பிரதமர் விஜயம்; நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆராய்வு

கொஸ்கம பகுதிக்கு பிரதமர் விஜயம்; நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆராய்வு 0

🕔6.Jun 2016

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கொஸ்கம பிரதேசத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்தார். கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்துக் காரணமாக, அங்கு பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு விஜயம் செய்த பிரதமர், அப்பிரதேச அரசாங்க அதிகாரிகளை அழைத்து கூட்டமொன்றினையும் நடத்தினார். ஆயுதங் களஞ்சியம் வெடித்துச் சிதறியமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கும்,

மேலும்...
பஸில் ராஜபக்ஷ கைது

பஸில் ராஜபக்ஷ கைது 0

🕔6.Jun 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். மபிட்டிகம – தொம்பே பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்ததில், பணச் சலவை மோசடியில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டியிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தினம்

மேலும்...
கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள்

கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள் 0

🕔6.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ தற்போது அணைந்துள்ளது. இந்த நிலையில், முகாமினைச் சுற்றி 06 கிலோமீற்றர் தூரத்துக்குள் வசித்து வந்தவர்கள் நேற்றிரவு தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆயினும், தற்போது அவர்கள் தமது இடங்களுக்குத் திரும்பி வருகின்றார்கள். இருந்தபோதும், முகாமிலிருந்து 01 கிலோமீற்றர் தொலைவில் இருப்பிடங்களைக் கொண்டவர்களை,

மேலும்...
கொஸ்கம வெடி விபத்து; ராணுவ வீரரொருவர் பலி

கொஸ்கம வெடி விபத்து; ராணுவ வீரரொருவர் பலி 0

🕔5.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்படி வெடி விபத்தில் காயமடைந்த நபரொருவர் அவிசாவளை வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலோகத் துண்டொண்றினால், குறித்த நபரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேற்படி நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி

மேலும்...
கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை

கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை 0

🕔5.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் எந்தவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரையில் அவிசாவல, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை மற்றும் தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் காயமடைந்த யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அவிசாவல வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்