சரத் பொன்சேகா அரசியல் அறிவற்றவர்; அமைச்சர் ஜோன் செனவிரட்ன பதிலடி

🕔 June 7, 2016

Jhone senaviratna+Sarath fonseka - 01
மு
ன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா எவ்விதமான அரசியல் அறிவும் அற்றவர் என்று அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒருவருடன் அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருப்பதை நினைக்கையில் வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

தொழில் அமைச்சில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பா அமைச்சர் மேலும் கூறுகையில்;

“அரசியல் பற்றி எந்தவிதமான அறிவுமற்ற, தனக்கு உரிமையில்லாத விடயங்கள் பற்றி பேசி, சமூகத்தில் பெரும் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டுள்ள சரத் பொன்சேகா போன்ற அமைச்சர் ஒருவருடன், அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருக்க நேரிட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது.

சரத் பொன்சேகா தனக்கு சொந்தமில்லாத வேறு அரசியல் கட்சிகளின் விவகாரங்கள் பற்றி கருத்து வெளியிடுகின்றார்.

அவர் – அனைவரையும் மிருகங்களின் பெயர்களைக் கொண்டே அழைக்கின்றார்.

நான் அட்டையைப் போன்று, யார் மீதாவது ஏறி அரசியல் செய்வதாக சரத் பொன்சேகா குற்றம் சமத்தியுள்ளார்.

1989ம் ஆண்டு முதல் நான் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றேன்.

சரத் பொன்சேகாவுக்கு அரசியல் அனுபவம் போதவில்லை. யார் மீதும் ஏறி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை.

சரத் பொன்சேகா கூறிய அட்டை பற்றி கருத்து, அவருக்குத்தான் மிகவும் பொருந்தும். ஏனென்றால் அவர் கொழும்பில் 5000 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார்.

எமது இலக்கு 2020ம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தை சுதந்திரக் கட்சியின் வசமாக்குவதாகும். எந்தவிதமான சூழ்ச்சித் திட்டங்களும் கிடையாது.

கோட்டாபய ராஜபக்ஷவை சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்வதன் மூலம், கட்சிக்குப் புதுப் பொலிவினை வழங்க முடியும் என நாம் நம்புகின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்