கொஸ்கம வெடி விபத்து; ராணுவ வீரரொருவர் பலி

🕔 June 5, 2016

Death - 099கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்படி வெடி விபத்தில் காயமடைந்த நபரொருவர் அவிசாவளை வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலோகத் துண்டொண்றினால், குறித்த நபரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேற்படி நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியப் பணிப்பாளர் பாலித மஹிபால தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்