கோட்டாவுக்கு கட்சியில் பதவிகள் வழங்கினால், அரசிலிருந்து விலகி விடுவேன்; சந்திரிக்கா எச்சரிக்கை

🕔 June 7, 2016

Chandrika  - 0987கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பதவியொன்றினை வழங்கி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்வாங்கிக் கொள்ளுமாயின், இந்த அரசுடன் – தான் தொடர்ந்தும் இருக்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தனகல பிரதேசதத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்த பின்னர் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டினைச் சூரையாடுவதை இல்லாமலாக்குமாறு விடுக்கப்பட்ட ஆணையின் பிரகாரமே, நாம் இந்த அரசாங்கத்தினைக் கொண்டு வந்தோம்.

ஆனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பதவியொன்றினை வழங்கி, அவரை உள்வாங்கிக் கொள்ளுமானால், இந்த அரசுடன் நான் தொடந்தும் இருக்கப் போவதில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்