கொஸ்கம பகுதிக்கு பிரதமர் விஜயம்; நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆராய்வு

🕔 June 6, 2016

Ranil - 012பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கொஸ்கம பிரதேசத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்தார்.

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்துக் காரணமாக, அங்கு பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்கு விஜயம் செய்த பிரதமர், அப்பிரதேச அரசாங்க அதிகாரிகளை அழைத்து கூட்டமொன்றினையும் நடத்தினார்.

ஆயுதங் களஞ்சியம் வெடித்துச் சிதறியமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதுகாப்புக் காரணமாக அப் பகுதியிலிருந்து வெளியேறிய மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக மேற்படி கூட்டத்தில் ஆராயப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்