Back to homepage

Tag "கொஸ்கம"

கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள்

கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள் 0

🕔11.Jun 2016

யுத்தத்துக்குப் பயந்து, ராணுவ சேவையிலிருந்த போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பில் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. கொஸ்கம ராணுவ முகாமின் ஆயுத கிடங்குகள் வெடித்தமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னளாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்து, குறித்து ராணுவத்தினர் கடுமையான அதிருப்தி வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கான நிதியை வழங்க வேண்டாம்; பிரதமர் உத்தரவு

அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கான நிதியை வழங்க வேண்டாம்; பிரதமர் உத்தரவு 0

🕔10.Jun 2016

வெள்ளத்தாலும், கொஸ்கம வெடி விபத்தினாலும் அழிவடைந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வரையில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்குரிய நிதியினை வழங்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறைசேரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று வியாழக்கிழமை அவர் இந்த உத்தரவினை வழங்கினார். பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வீடுகளை அமைப்பதற்கான நிதியினை வழங்கும் வரை, இந்த நடவடிக்கை

மேலும்...
கொஸ்கம; 1000 கோடி இழப்பு

கொஸ்கம; 1000 கோடி இழப்பு 0

🕔7.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 1000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் அழிந்து போனதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வெடிவிபத்தினால், 09 ஆயிரம் தொன் வெடிபொருட்கள் முற்றாக நாசமாகின. இதன் பெறுமதி 10 பில்லியன் (1000 கோடி) ரூபாவாகும். இந்த வெடிபொருள் கிடங்கு சரியான நிபுணத்துவத்துடன் அமைக்கப்படவில்லை என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கொஸ்கம

மேலும்...
கொஸ்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி

கொஸ்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி 0

🕔7.Jun 2016

கொஸ்கம சாலாவ ராணுவ முகாம்ஆயுதக் களஞ்சியசாலையில்  ஏற்பட்ட தீ விபத்தினால், பாதிக்கப்பட்ட பூகொட குமாரிமுல்ல மக்களுக்கான குடிநீர் தேவையினை, தனது சொந்தப் பணத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் நிறைவேற்றிக் கொடுத்தார்.கொஸ்கம வெடி விபத்தின் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி, விகாரையிலும் வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த மக்களை நேற்று  திங்கட்கிழமை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.

மேலும்...
கொஸ்கம சம்பவத்தில் 70 ஆயிரம் தனி விபரக் கோப்புகள் நாசம்

கொஸ்கம சம்பவத்தில் 70 ஆயிரம் தனி விபரக் கோப்புகள் நாசம் 0

🕔6.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாமில் ஏற்பட்ட வெடி விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் தனி விபரக் கோப்புகள் நாசமடைந்துள்ளதாக ராணுவத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இலங்கை ராணுவத்தின் தொண்டர் படையினருடைய தனி விபரக் கோப்புகளே இவ்வாறு அழிவடைந்துள்ளன. மேற்படி கோப்புக்களை மீட்டெடுப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது. கொஸ்கம

மேலும்...
சேதமடைந்த வீடுகள், அரசாங்க செலவில் திருத்தப்படும்; அமைச்சர் யாப்பா

சேதமடைந்த வீடுகள், அரசாங்க செலவில் திருத்தப்படும்; அமைச்சர் யாப்பா 0

🕔6.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தால் சேதமடைந்த வீடுகள் அனைத்தும், அரசாங்க செலவில் திருத்தியமைக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, அவர் இத்தீர்மானத்தை அறிவித்ததாக அமைச்சர் கூறினார். இதேவேளை, கொஸ்கம சம்பவத்தால் மூடப்பட்டுள்ள கொழும்பு – அவிஸாவளை பிரதான வீதியை திறப்பதற்கு, இன்னும் 48 மணித்தியாலங்கள்

மேலும்...
பாதுகாப்பான பகுதியாக இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது; ராணுவ பேச்சாளர்

பாதுகாப்பான பகுதியாக இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது; ராணுவ பேச்சாளர் 0

🕔6.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாமின் அண்மித்த பிரதேசத்தை பாதுகாப்பான பகுதி என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என்று ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக ஏற்பட்ட தீ  முழுமையாக அணைக்கப்பட்ட போதும்,  ஆயுத களஞ்சியத்திலிருந்து  தொடர்ந்து வெடிப்பு சத்தங்கள்  கேட்டுக்கொண்டிருப்பதாக அவர் கூறினார். ராணுவ

மேலும்...
கொஸ்கம பகுதிக்கு பிரதமர் விஜயம்; நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆராய்வு

கொஸ்கம பகுதிக்கு பிரதமர் விஜயம்; நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆராய்வு 0

🕔6.Jun 2016

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கொஸ்கம பிரதேசத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்தார். கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்துக் காரணமாக, அங்கு பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு விஜயம் செய்த பிரதமர், அப்பிரதேச அரசாங்க அதிகாரிகளை அழைத்து கூட்டமொன்றினையும் நடத்தினார். ஆயுதங் களஞ்சியம் வெடித்துச் சிதறியமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கும்,

மேலும்...
கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள்

கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள் 0

🕔6.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ தற்போது அணைந்துள்ளது. இந்த நிலையில், முகாமினைச் சுற்றி 06 கிலோமீற்றர் தூரத்துக்குள் வசித்து வந்தவர்கள் நேற்றிரவு தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆயினும், தற்போது அவர்கள் தமது இடங்களுக்குத் திரும்பி வருகின்றார்கள். இருந்தபோதும், முகாமிலிருந்து 01 கிலோமீற்றர் தொலைவில் இருப்பிடங்களைக் கொண்டவர்களை,

மேலும்...
கொஸ்கம வெடி விபத்து; ராணுவ வீரரொருவர் பலி

கொஸ்கம வெடி விபத்து; ராணுவ வீரரொருவர் பலி 0

🕔5.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்படி வெடி விபத்தில் காயமடைந்த நபரொருவர் அவிசாவளை வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலோகத் துண்டொண்றினால், குறித்த நபரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேற்படி நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி

மேலும்...
கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை

கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை 0

🕔5.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் எந்தவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரையில் அவிசாவல, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை மற்றும் தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் காயமடைந்த யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அவிசாவல வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்...
கொஸ்கம ராணுவ முகாம் களஞ்சியசாலையில் பாரிய வெடி விபத்து

கொஸ்கம ராணுவ முகாம் களஞ்சியசாலையில் பாரிய வெடி விபத்து 0

🕔5.Jun 2016

சலாவ கொஸ்கம ராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் சற்று நேரத்துக்கு முன்னர் பாரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள கொழும்பு – அவிசாவளை பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்