கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை

🕔 June 5, 2016

No casualties - 01கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் எந்தவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதுவரையில் அவிசாவல, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை மற்றும் தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் காயமடைந்த யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அவிசாவல வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அந்தப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறுவதால் அங்கு பாரிய வாகன நெரிசல் காணப்படுகின்றது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்