மஹிந்தவின் பாதுகாப்பு தலைமை அதிகாரியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை

🕔 June 7, 2016

CID - 099முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி, குற்றப் புலனாய்புத் திணைக்களத்துக்கு இன்று செவ்வாய்கிழமை காலை ஆஜராகியுள்ளார்.

மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணையொன்று தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு – இவர் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேஜர் நெவில் வன்னியாராச்சியிடம் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றுக்கு கொழும்பு பிரதம நீதவான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்