ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 02 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் பஸில் விடுதலை

🕔 June 6, 2016

Basil Rajapakse - 012முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு பூகொட நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.

காணி கொள்வனவு ஒன்றின் மூலம் பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில், இன்று திங்கட்கிழமை – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பஸில் ராஜபக்ஷவை கைது செய்து பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர்.

இதன்போது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் பஸில் ராஜபக்ஸவை  விடுவிக்குமாறு பூகொட நீதவான் நீதிமன்ற நீதிபதி ருவான்பத்திரன உத்தரவிட்டார்.

இதேவேளை, பஸில் ராஜபக்ஷவின் கடவுச் சீட்டும் நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Comments