கொஸ்கம சம்பவத்தில் 70 ஆயிரம் தனி விபரக் கோப்புகள் நாசம்
கொஸ்கம ராணுவ முகாமில் ஏற்பட்ட வெடி விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் தனி விபரக் கோப்புகள் நாசமடைந்துள்ளதாக ராணுவத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை ராணுவத்தின் தொண்டர் படையினருடைய தனி விபரக் கோப்புகளே இவ்வாறு அழிவடைந்துள்ளன.
மேற்படி கோப்புக்களை மீட்டெடுப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது.
கொஸ்கம ராணுவ முகாமிலேயே, இலங்கை ராணுவத்தின் தொண்டர் படைக்கான தலைமையகம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ராணுவத்தின் தொண்டர் படையானது முக்கியமானதொரு பிரிவாகும்.