Back to homepage

மேல் மாகாணம்

மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம்

மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம் 0

🕔21.Aug 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளரான மன்சூர் ஏ. காதர், தன்னை கட்சியின் செயலாளர் எனக் குறிப்பிட்டு உயர்பீட உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியமை தொடர்பில், அந்தக் கட்சிக்குள் பாரிய அதிருப்திகளும், விசனங்களும் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம், எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர் 0

🕔21.Aug 2016

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்தப் பரீட்சையில் 03 லட்சத்து 50 ஆயிரத்து 701 மாணவர்கள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களில் 421 மாணவர்கள் விசேட தேவையுடையோர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 2959 பரீட்சை மண்டபங்களில், மேற்படி பரீட்சை நடைபெறுகிறது. இதற்காக, 28 ஆயிரம்

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது 0

🕔20.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸாம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, உயர்பீட உறுப்பினர்களுக்கு கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் 03 ஆம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின் பின்னர், நடைபெறும் உயர்பீடக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 03

மேலும்...
நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔20.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பணிப்பாளராகச் செயற்பட்ட இரேஷா டி சில்வா என்பவரை கைது செய்வதற்கு, இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்பரேட்டர்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட மேற்படி நபர், தற்பொழுது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்...
கோட்டாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேறினேன்: முன்னாள் பொலிஸ் பேச்சாளர்

கோட்டாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேறினேன்: முன்னாள் பொலிஸ் பேச்சாளர் 0

🕔20.Aug 2016

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவே, தான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றதாக முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பிய தனக்கு, பொலிஸ் திணைக்களத்தில் மீண்டும் சேவையாற்ற அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும், விரைவில் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்படலாம் என எதிர்ப்பார்ப்பதாகவும், அவர்

மேலும்...
றிசாத் மீது மோசடி குற்றச்சாட்டு; ஆஜராகுமாறு அழைப்பு

றிசாத் மீது மோசடி குற்றச்சாட்டு; ஆஜராகுமாறு அழைப்பு 0

🕔19.Aug 2016

பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, அமைச்சர் றிசாட் பதியுத்தீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘சதோச’ நிறுவனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட 05 பில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதியில், கடந்த ஆட்சிக் காலத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ரிசாத் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு  தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவு, றிசாத் பதியுத்தீனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த

மேலும்...
ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; புதிய முறைமையின் கீழ் நடைபெறும்: பைசர் முஸ்தபா

ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; புதிய முறைமையின் கீழ் நடைபெறும்: பைசர் முஸ்தபா 0

🕔19.Aug 2016

உள்ளூராட்சி சபை தேர்தல்கள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் இதனக் கூறியுள்ளார். இந்த வருடத்துக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று, தான் எண்ணியபோதும், ஜனாதிபதி, 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதனை நடத்துமாறு பணித்துள்ளார் என்று அவர்

மேலும்...
பதவி துறந்தார் டலஸ்; சு.கட்சிக்குள் முற்றுகிறது முறுகல்

பதவி துறந்தார் டலஸ்; சு.கட்சிக்குள் முற்றுகிறது முறுகல் 0

🕔19.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும அறிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர், இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலமுக்கியஸ்தர்கள்,  அமைப்பாளர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் நீக்கப்பட்டனர். சுதந்திரக் கட்சியின் தலைவர் – ஜனாதிபதி

மேலும்...
மஹிந்தவின் புதிய கட்சிக்கு செயலாளர் யார்; அம்பலப்படுத்தினார் அமைச்சர் டிலான்

மஹிந்தவின் புதிய கட்சிக்கு செயலாளர் யார்; அம்பலப்படுத்தினார் அமைச்சர் டிலான் 0

🕔19.Aug 2016

பசில் ராஜபக்ஷவின் புராணத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி பாடிக்கொண்டு திரிவதாக, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படும், மஹிந்த தலைமையிலான புதிய கட்சியின் செயலாளர் பதவி, பவித்ராவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், பசில் ராஜபக்ஷ இதற்கான உறுதிமொழியை பவித்ராவுக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் டிலான் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தொகுதி

மேலும்...
சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி, அரசுடமை ஆக்கப்பட்டதாக வரும் செய்திகள் பொய்

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி, அரசுடமை ஆக்கப்பட்டதாக வரும் செய்திகள் பொய் 0

🕔18.Aug 2016

சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்துக்கு சொந்தமான 157.5 மில்லியன் ரூபா நிதி, அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ரொஹான் வெல்விட்ட வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுடமையாக்கப்பட்டது வேறொரு நிறுவனத்துக்குச் சொந்தமான நிதியாகும். அந்த நிறுவனத்துக்கும், சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. அந்தவகைியல், சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்தின்

மேலும்...
மாவட்ட அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டமை, புனரமைப்பு நடவடிக்கையாகும்: சு.க. செயலாளர்

மாவட்ட அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டமை, புனரமைப்பு நடவடிக்கையாகும்: சு.க. செயலாளர் 0

🕔18.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பினை மீறுகின்ற எந்தவொரு உறுப்பினரும், கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று, அமைச்சரும் – சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் இதனைக் கூறினார். ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், சுதந்திரக் கட்சியின் முன்னணி பிரமுகர்கள் பலர், அவர்களின்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக, மஸ்தான் எம்.பி. நியமனம்

சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக, மஸ்தான் எம்.பி. நியமனம் 0

🕔18.Aug 2016

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, இந்த நியமனம் வழங்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்காக சுதந்திரக் கட்சியினால் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான்,

மேலும்...
விசேட அதிரடிப்படை தளபதியாக, லத்தீப் நியமனம்

விசேட அதிரடிப்படை தளபதியாக, லத்தீப் நியமனம் 0

🕔18.Aug 2016

பொலிஸ் விசேட அதிரடிப்படை தளபதியாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இந்த நியமனத்துக்கான பரிந்துரையை, வழங்கியிருந்தது. ஆயினும், குறித்த பரிந்துரையை இதுவரை காலமும் செயற்படுத்தாமல், இருந்தமை தொடர்பில் விளக்கம் கோருவதற்காக, இன்றைய தினம் பொலிஸ்மா அதிபரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை

மேலும்...
நாட்டில் இருந்தால் வருவேன்; மஹிந்த உறுதி

நாட்டில் இருந்தால் வருவேன்; மஹிந்த உறுதி 0

🕔18.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதயளித்துள்ளார் என்று, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். மாநாடு நடைபெறும் போது, தான் நாட்டில் இருந்தால் நிச்சயம் கலந்துகொள்வேன் என்று, மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகவும் – அமைச்சர் செனவிரத்ன கூறினார். சுதந்திரக் கட்சியின் வருடாந்த

மேலும்...
‘பட்டை’ வியாபாரத்தில் பொலிஸ் அதிகாரி; மாறுவேடத்தில் சென்றவர்களிடம் மாட்டினார்

‘பட்டை’ வியாபாரத்தில் பொலிஸ் அதிகாரி; மாறுவேடத்தில் சென்றவர்களிடம் மாட்டினார் 0

🕔18.Aug 2016

வல்லப்பட்டையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த,   பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், மாறுவேடத்தில் சென்ற பொலிஸாருக்கே, வல்லப்பட்டயினை குறித்த பொலிஸ் அதிகாரி விற்பனை செய்ய முயற்சித்துள்ளார். வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாலிந்தநுவர காட்டுப் பகுதியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்