விசேட அதிரடிப்படை தளபதியாக, லத்தீப் நியமனம்

🕔 August 18, 2016

Latheef - 0123பொலிஸ் விசேட அதிரடிப்படை தளபதியாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இந்த நியமனத்துக்கான பரிந்துரையை, வழங்கியிருந்தது.

ஆயினும், குறித்த பரிந்துரையை இதுவரை காலமும் செயற்படுத்தாமல், இருந்தமை தொடர்பில் விளக்கம் கோருவதற்காக, இன்றைய தினம் பொலிஸ்மா அதிபரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1979 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட லத்தீப், 1984 ஆம் ஆண்டு விசேட அதிரடிப்டையின் முதலாவது அணியில் சேர்ந்து கொண்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ள இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமை கற்கையில் முதுமானிப் பட்டத்தினை நிறைவு செய்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க பல்கலைக்கழகத்திலும் இவர் தனது கல்விப் பயிற்சியினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்