சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி, அரசுடமை ஆக்கப்பட்டதாக வரும் செய்திகள் பொய்

🕔 August 18, 2016

CSN - 09சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்துக்கு சொந்தமான 157.5 மில்லியன் ரூபா நிதி, அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ரொஹான் வெல்விட்ட வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுடமையாக்கப்பட்டது வேறொரு நிறுவனத்துக்குச் சொந்தமான நிதியாகும். அந்த நிறுவனத்துக்கும், சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை.

அந்தவகைியல், சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி, அரசுடமையாக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்