றிசாத் மீது மோசடி குற்றச்சாட்டு; ஆஜராகுமாறு அழைப்பு

🕔 August 19, 2016

Rishad - 032பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, அமைச்சர் றிசாட் பதியுத்தீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘சதோச’ நிறுவனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட 05 பில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதியில், கடந்த ஆட்சிக் காலத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ரிசாத் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு  தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவு, றிசாத் பதியுத்தீனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைகேடு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே அவரும் விசாரணைகளுக்காக விரைவில் அழைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்