மஹிந்தவின் புதிய கட்சிக்கு செயலாளர் யார்; அம்பலப்படுத்தினார் அமைச்சர் டிலான்

🕔 August 19, 2016

Dilan - 098சில் ராஜபக்ஷவின் புராணத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி பாடிக்கொண்டு திரிவதாக, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படும், மஹிந்த தலைமையிலான புதிய கட்சியின் செயலாளர் பதவி, பவித்ராவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், பசில் ராஜபக்ஷ இதற்கான உறுதிமொழியை பவித்ராவுக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் டிலான் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா, தற்போது பசில் வீட்டு உப்பை உண்பதாகவும், புதிய கட்சியின் செயலாளர் பதவியை, அவருக்கு வழங்க – பசில் உறுதியளித்துள்ளமையினாலேயே, பசில் புராணத்தை பவித்ரா பாடுவதாகவும் அமைச்சர் டிலான் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்