ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; புதிய முறைமையின் கீழ் நடைபெறும்: பைசர் முஸ்தபா
உள்ளூராட்சி சபை தேர்தல்கள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் இதனக் கூறியுள்ளார்.
இந்த வருடத்துக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று, தான் எண்ணியபோதும், ஜனாதிபதி, 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதனை நடத்துமாறு பணித்துள்ளார் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய தேர்தல் முறைமையின் கீழ் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
இந்த தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கு பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.