பதவி துறந்தார் டலஸ்; சு.கட்சிக்குள் முற்றுகிறது முறுகல்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும அறிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணியினர், இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலமுக்கியஸ்தர்கள், அமைப்பாளர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் நீக்கப்பட்டனர்.
சுதந்திரக் கட்சியின் தலைவர் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த அதிரடி முடிவினை எடுத்திருந்தார்.
இதனையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும, தனது அமைப்பபாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களாவர்.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும, மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.