Back to homepage

மேல் மாகாணம்

மஹிந்தவை சு.க. தலைவராக நியமிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; எதிர்ப்பினை சமர்ப்பிக்க கால அவகாசம்

மஹிந்தவை சு.க. தலைவராக நியமிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; எதிர்ப்பினை சமர்ப்பிக்க கால அவகாசம் 0

🕔30.Aug 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் நியமிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் எழுத்துமூல எதிர்ப்புக்களை செப்டெம்பர் 04ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மாவட்ட நீதிபதி சுஜீவ நிசங்க நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். எழுத்துமூல எதிர்பை நேற்றைய தினமே சமர்ப்பிக்குமாறு, உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தமக்குக்

மேலும்...
மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அமைச்சர் றிசாட் கடிதம்

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அமைச்சர் றிசாட் கடிதம் 0

🕔30.Aug 2017

மியன்மாரிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு ராணுவம் நடத்திவரும் காட்டுமிராண்டித்தனமான, எல்லைமீறிய வன்முறைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வன்மையாக கண்டித்துள்ளார். மியன்மார் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும், திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை சர்வதேச சமூகமும், ஐ.நாடுகள் சபையும் கண்டும் காணாததுபோல் இருப்பது வேதனையானது  எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, மியன்மார் வன்முறைகள்

மேலும்...
அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று மாலை தெஹிவளையில் இடம்பெறும்

அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று மாலை தெஹிவளையில் இடம்பெறும் 0

🕔30.Aug 2017

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று புதன்கிழமை மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முஸ்லிம் சமய விவகார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், நேற்று இரவு 7.15 மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அரசியலுக்குள் பிரவேசித்து, பின்பு ஐ.தே.க.

மேலும்...
முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் காலமானார்

முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் காலமானார் 0

🕔29.Aug 2017

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று செவ்வாய்கிழமை இரவு, தனது 80ஆவது வயதில் காலமானார். சுகயீனம் காரணமாக, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். எல்லோராலும் ‘அஸ்வர் ஹாஜியார்’ என்று அழைக்கப்படும் இவர், அரசியலுக்குள் வருவதற்கு முன்னர் ஊடகவியலாளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார். 1950ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி மூலம் அரசியலுக்குள் நுழைந்த அஸ்வர் ஹாஜியார்,

மேலும்...
மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை 0

🕔29.Aug 2017

மாணவர் ஒருவரை தரம் ஒன்றுக்கு வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, லஞ்சம் பெற்ற முன்னாள் அதிபர் ஒருவருக்கு 08 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று செவ்வாய்கிழமை மேற்படி தண்டனையினை விதித்து தீர்ப்பளித்தது. பாணந்துறையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக, குறித்த அதிபர் 25,000 ரூபா பணத்தை

மேலும்...
இந்தியாவிலிருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி; தட்டுப்பாடு ஓரளவு நீக்கப்படும்

இந்தியாவிலிருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி; தட்டுப்பாடு ஓரளவு நீக்கப்படும் 0

🕔29.Aug 2017

இந்தியாவிலிருந்து அடுத்தமாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 70ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கத்துக்கும், இந்திய தனியார் துறையினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், ஒரு மெற்றிக்தொன் அரிசியை  445டொலருக்கு இந்திய தனியார்துறையினர் வழங்குவதாகவும் அவர்

மேலும்...
பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி 0

🕔29.Aug 2017

– க. கிஷாந்தன் – பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட விபத்தில், ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பொலிஸ் பிரிவிரிற்குட்பட்ட அட்டன் – தலவாக்கலை பிரதான வீதியில் டெவோன் பகுதியில், இன்று செவ்வாய்கிழமை மதியம்  இந்த விபத்து நிகழ்ந்தது. கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும்...
விஜேதாஸவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைக்க உள்ளோம்: நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

விஜேதாஸவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைக்க உள்ளோம்: நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம 0

🕔28.Aug 2017

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபகஷவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். “விஜேதாஸ ராஜபக்ஷ இலங்கை அரசியலில் முக்கியமானவர். அவருடைய தேவை எமக்குத் தெரியும். எனவே, அவருடன் பேசி ஒன்றிணைந்த எதிரணியில் அவரை இணைத்துக் கொள்ள முயற்சிப்போம். மேலும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற

மேலும்...
அஸ்வர் ஹாஜியாருக்காக பிரார்த்தியுங்கள்

அஸ்வர் ஹாஜியாருக்காக பிரார்த்தியுங்கள் 0

🕔27.Aug 2017

– எம்.எஸ். எம்.ஸாகிர் – முன்னாள் முஸ்லிம் சமய விவகார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர்  ஹாஜியார், கடும் நோய்வாய்ப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சரின் விரைவான சுகத்துக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அஸ்வருக்காக பிராத்தனை செய்யுமாறு, புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்றுள்ள அமைச்சர்

மேலும்...
ரவி கருணாநாயக்கவுக்கு பின் கதவால் அதிகாரம்; அலறி மாளிகையில் அறையொன்றும் ஒதுக்கீடு

ரவி கருணாநாயக்கவுக்கு பின் கதவால் அதிகாரம்; அலறி மாளிகையில் அறையொன்றும் ஒதுக்கீடு 0

🕔27.Aug 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு, அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் ஒருவருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, அலறி மாளிகையின் 105ஆவது இலக்க அறையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தும் பொருட்டு, அரச இலட்சனையுள்ள கடிதத்தலைப்பினையும் ரவி கருணாநாயக்க பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமரின் அதிகாரத்துடன் இதனை அவர் மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும், ஐ.தே.கட்சியின்

மேலும்...
எங்களை தோற்கடித்தவர்களுக்கு ஆதரவாக, நாங்களே களமிறங்கியுள்ளோம்: நாமல் பெருமிதம்

எங்களை தோற்கடித்தவர்களுக்கு ஆதரவாக, நாங்களே களமிறங்கியுள்ளோம்: நாமல் பெருமிதம் 0

🕔27.Aug 2017

சிறுபான்மை மக்களை மிக அதிகமாக பாதிக்கக் கூடிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமான சட்டமூலத்துக்கு, கூட்டு எதிர்க்கட்சியினர்தான் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்யைில்; “சிறுபான்மை மக்கள் இந்த ஆட்சியாளர்களுடையதும். எங்களினதும் உண்மை முகங்களை அறிந்துகொள்ளும்

மேலும்...
டிசம்பரில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்

டிசம்பரில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 0

🕔26.Aug 2017

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டமையினை அடுத்து, அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும், இவ்வருடம் டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரணதர பரீட்சை நடைபெறுவதற்கு முன்னதாக நடத்த முடியும் என நம்பப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு மேல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை, இவ்வருடம் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவோம்; ஐ.தே.க. தவிர, யாரும் எம்முடன் இணையலாம்: பசில்

மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவோம்; ஐ.தே.க. தவிர, யாரும் எம்முடன் இணையலாம்: பசில் 0

🕔26.Aug 2017

எதிர்வரும் மாகாணசபை தேர்தல்களில் தாங்கள் ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐ.தே.கட்சி தவிர ஏனைய எந்தக் கட்சியும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். மாகாணசபை தேர்தல்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள சட்ட மூலமானது,

மேலும்...
ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவசிமானது: மஹிந்த ராஜபக்ஷ

ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவசிமானது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔25.Aug 2017

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, பொருத்தமானதொரு நடவடிக்கையாகும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை பேசும் போதே, மேற்கண்ட விடயத்தினை அவர் கூறினார். தற்போதைய காலகட்டத்தில், அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
க.பொ.த. உயர்தர பொது அறிவுப் பரீட்சை 04ஆம் திகதிக்கு மாற்றம்

க.பொ.த. உயர்தர பொது அறிவுப் பரீட்சை 04ஆம் திகதிக்கு மாற்றம் 0

🕔25.Aug 2017

க.பொ.த உயர்தர, பொது அறிவுப் பரீட்சையை எதிர் வரும் 04ம் திகதி திங்கட் கிழமை நடத்துவதென தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மேற்படி பாடத்துக்குரிய பரீட்சை 02ஆம் திகதி நடைபெறும் என அட்டவணைப் படுத்தப்பட்டிருந்த போதிலும், 02ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினமாகையினால், குறித்த பாடத்துக்கான பரீட்சையை 03ஆம் திகதி நடத்துவதென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்