அஸ்வர் ஹாஜியாருக்காக பிரார்த்தியுங்கள்
– எம்.எஸ். எம்.ஸாகிர் –
முன்னாள் முஸ்லிம் சமய விவகார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் ஹாஜியார், கடும் நோய்வாய்ப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரின் விரைவான சுகத்துக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அஸ்வருக்காக பிராத்தனை செய்யுமாறு, புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்றுள்ள அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மக்கா மதீனாவிலும் அவருக்காக விசேட பிரார்த்தனையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் பௌசி மதீனாவிலிருந்து தெரிவித்துள்ளார்.
இதேநேரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஸ்வரின் தேகாரோக்கியத்துக்காக பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.