முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் காலமானார்

🕔 August 29, 2017

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று செவ்வாய்கிழமை இரவு, தனது 80ஆவது வயதில் காலமானார்.

சுகயீனம் காரணமாக, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

எல்லோராலும் ‘அஸ்வர் ஹாஜியார்’ என்று அழைக்கப்படும் இவர், அரசியலுக்குள் வருவதற்கு முன்னர் ஊடகவியலாளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார்.

1950ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி மூலம் அரசியலுக்குள் நுழைந்த அஸ்வர் ஹாஜியார், பல்வேறு தடவை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்திருந்தார்.

ஆயினும் 2008ஆம் ஆண்டு, ஐ.மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து, நாடாளுமன்ற உறுப்பினராக தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.

முதன்முறையாக 1989ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினராக அஸ்வர் ஹாஜியார் பதவியேற்றார்.

தனது அரசியல் வாழ்வில் பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களை வகித்த அஸ்வர் ஹாஜியார், முஸ்லிம் கலாசார அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளையும் வகித்திருந்தார்.

Comments