பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி

🕔 August 29, 2017

– க. கிஷாந்தன் –

யணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட விபத்தில், ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிரிற்குட்பட்ட அட்டன் – தலவாக்கலை பிரதான வீதியில் டெவோன் பகுதியில், இன்று செவ்வாய்கிழமை மதியம்  இந்த விபத்து நிகழ்ந்தது.

கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் ஆசிரியை ஸ்தலத்திலேயே பலியானதோடு, முச்சக்கர வண்டியின் சாரதி படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

முச்சக்கர வண்டி ஓடிக்கொண்டிருந்தபோது, டெவோன் பகுதியில் தீடிரென பாரிய மரம் ஒன்று முறிந்து முச்சக்கரவண்டியின் மேல் விழுந்தமையினால் இவ்வனர்த்தம் இடம்பெற்றது.

விபத்தில் உயிரிழந்தவர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக கடமையாற்றும் வெரோனிக்கா (வயது -39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த சாரதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்