முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபகஷவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
“விஜேதாஸ ராஜபக்ஷ இலங்கை அரசியலில் முக்கியமானவர். அவருடைய தேவை எமக்குத் தெரியும். எனவே, அவருடன் பேசி ஒன்றிணைந்த எதிரணியில் அவரை இணைத்துக் கொள்ள முயற்சிப்போம்.
மேலும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இது தொடர்பில் பேசவுள்ளோம். அவர்களுடைய தீர்மானத்தை அறிந்து கொண்ட பின்னர், விஜேதாஸவுடன் பேசுவோம்” என்றும் அவர் கூறினார்.
ஐ.தே.கட்சியைச் சேர்ந்த விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, அந்தக் கட்சியினர் மேற்கொண்ட ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக, அவர் வகித்த அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



