ஞானசாரரின் பின்னால் நல்லாட்சியாளர்கள் உள்ளனர்; உலப்பனே தேரரின் ஜப்பான் பயணம் உறுதி செய்துள்ளது

🕔 August 28, 2017

– அ. அஹமட் –

னாதிபதி மைதிரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்தவரும், ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொடுக்க நீதி மன்றம் வரை சென்றவருமான உலப்பனே சுமங்கல தேரர், ஞானசார தேரருடன்ஜப்பான் சென்றுள்ளார். இதன் மூலம், ஞானசார தேரரின் பின்னால் இந்த நல்லாட்சியே இருப்பதாக, இவ்வளவு காலமும் நாம் கூறி வந்தமை நிரூபணமாகியுள்ளது.

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படு வந்த ஞானசார தேரருக்கு, மூன்று வழக்குகளில் இரண்டு மணிநேரங்களுக்குள் பிணை வழங்கப்பட்டது. இது இலங்கை நீதித்துறை வரலாற்றில் ஒரு சாதனையாகும்.

ஞானசார தேரரை பாதுகாத்ததன் பின்னணியில் ஜனாதிபதி இருந்ததாக நாம் கூறுவதற்கு முன்னர், அஸாத் சாலியே கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைதிரிபாலவின் வெற்றிக்காக உழைத்தவரும் அவரது அலோசகருமான உலப்பனே சுமங்கல தேரர், ஞானசார தேரருக்கு பிணைபெற்றுக்கொடுக்க நீதி மன்றம் வரை சென்றார்.

அதே தேரர்,  நீதிமன்றத்துக்கு அறிவிக்காமல் ஜப்பான் சென்றுள்ள ஞானசார தேரருடன் ஜப்பான்சென்றுள்ளமையானது, நாம் இவ்வளவு காலமும் கூறிவந்த விடயங்களை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது.

திட்டமிட்ட ஆட்சி கவிழ்ப்பு சதி திட்டத்தில் ஓர் அங்கமாக, பொதுபல சேனா இருந்துள்ளது என்பதையும், ஒருபுறம் அவர்களை மஹிந்த குடும்பத்துடன் ஒட்டி உறவாட செய்துவிட்டு, மறுபுறம் அவர்களை கொண்டு முஸ்லிம்களை தாக்கியதும் திட்டமிடப்பட்ட சதி என்பதையும், தற்போது ஞானசார தேரரை காப்பாற்ற இவ்வரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் மூலம் எமக்கு உறுதியாகியுள்ளது.

கூட்டு எதிரணினர் வெளி நாடு செல்வதற்கு ஆயிரம் முறை நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டிய சூழ்நிலையில், ஞானசார தேரர் எதுவித அனுமதியும் இன்றி ஜப்பான் சென்றுள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகூட தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்