க.பொ.த. உயர்தர பொது அறிவுப் பரீட்சை 04ஆம் திகதிக்கு மாற்றம்
க.பொ.த உயர்தர, பொது அறிவுப் பரீட்சையை எதிர் வரும் 04ம் திகதி திங்கட் கிழமை நடத்துவதென தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேற்படி பாடத்துக்குரிய பரீட்சை 02ஆம் திகதி நடைபெறும் என அட்டவணைப் படுத்தப்பட்டிருந்த போதிலும், 02ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினமாகையினால், குறித்த பாடத்துக்கான பரீட்சையை 03ஆம் திகதி நடத்துவதென அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், 03ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாகயாகையால் 04ம் திகதி திங்கட்கிழமை, குறித்த பாடத்துக்குரிய பரீட்சையை நடத்துவதென தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.