ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவசிமானது: மஹிந்த ராஜபக்ஷ

🕔 August 25, 2017

மைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, பொருத்தமானதொரு நடவடிக்கையாகும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை பேசும் போதே, மேற்கண்ட விடயத்தினை அவர் கூறினார்.

தற்போதைய காலகட்டத்தில், அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் பொது, மக்கள் அதனைப் பற்றி புரிந்து கொள்வர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒன்றிணைந்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேர் கையொப்பமிட்டு, அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினைச் சமர்ப்பித்துள்ளனர்.

Comments