மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவோம்; ஐ.தே.க. தவிர, யாரும் எம்முடன் இணையலாம்: பசில்

🕔 August 26, 2017

திர்வரும் மாகாணசபை தேர்தல்களில் தாங்கள் ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐ.தே.கட்சி தவிர ஏனைய எந்தக் கட்சியும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

மாகாணசபை தேர்தல்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள சட்ட மூலமானது, நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வழங்கியிருந்த உறுதிமொழிக்கு முரணாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி அதிகமான ஆசனங்களைப் பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், நிச்சயமாக அரசாங்கம் தோற்றுப் போகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்