ரவி கருணாநாயக்கவுக்கு பின் கதவால் அதிகாரம்; அலறி மாளிகையில் அறையொன்றும் ஒதுக்கீடு

🕔 August 27, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு, அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் ஒருவருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, அலறி மாளிகையின் 105ஆவது இலக்க அறையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தும் பொருட்டு, அரச இலட்சனையுள்ள கடிதத்தலைப்பினையும் ரவி கருணாநாயக்க பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமரின் அதிகாரத்துடன் இதனை அவர் மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட செயற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை, கிராமிய உள்கட்டமைப்புக்கள் அபிவிருத்தி திட்டத்துக்கான பொறுப்பாளராகவும் ரவி கருணாநாயக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அறிய முடிகிறது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி  அமைச்சு, அடுத்த மாதம் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது.

சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரத்தோடு தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டினை எதிர்கொண்டமையினை அடுத்து, தனது அமைச்சுப் பதவியினை, ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்