Back to homepage

மேல் மாகாணம்

நுரைச்சோலை வீடுகளை பகிர்ந்தளிக்கும் முயற்சி: சட்ட மா அதிபர், முன்னாள் அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி அழைப்பு

நுரைச்சோலை வீடுகளை பகிர்ந்தளிக்கும் முயற்சி: சட்ட மா அதிபர், முன்னாள் அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி அழைப்பு 0

🕔25.Sep 2017

அம்பாறை மாவட்டம் – நுரைச்சோலை சுனாமி வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில், சட்ட மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஆகியோரை இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி வீடுகளை பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரியிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று விடுத்த வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ஜனாதிபதி

மேலும்...
மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, அமைச்சர் ராஜிதவுக்கு எரான் பாராட்டு

மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, அமைச்சர் ராஜிதவுக்கு எரான் பாராட்டு 0

🕔23.Sep 2017

மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன பாராட்டுத் தெரிவித்தார். தேசிய மருந்து ஒழுங்கமைப்பு அதிகாரச் சட்டம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் ராஜிதவை ஏரான் பாராட்டினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “மருந்துப்

மேலும்...
பசீரும் ஹக்கீமும்: பகைமைக்கு வெளியே…

பசீரும் ஹக்கீமும்: பகைமைக்கு வெளியே… 0

🕔23.Sep 2017

– அஹமட் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தும் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள். சில வருடங்களாக இருவருக்குள்ளும் நிலவி வந்த முரண்பாடுகள், இப்போது பகையாகியிருக்கின்றது. மு.கா. தவிசாளர் பதவியிலிருந்து பசீரை ஹக்கீம் விலக்குமளவுக்கும், மு.கா. தலைவர் பதவியிலிருந்து ஹக்கீமை விரட்டியடிப்பேன் என்று பசீர் சபதமெடுக்கும் அளவுக்கும், அந்தப் பகைமை

மேலும்...
ஹக்கீம் வீட்டில் மஹிந்த; அரசியல் கணக்குகளுக்கு அப்பால்…

ஹக்கீம் வீட்டில் மஹிந்த; அரசியல் கணக்குகளுக்கு அப்பால்… 0

🕔22.Sep 2017

– அஹமட் – ‘பிணத்திலும் அரசியல் செய்கின்றவர்கள்’ வாழுகின்ற காலமிது. ஆனால், எல்லோரும் அப்படியல்ல என்பதற்கு அடிக்கடி நல்ல உதாரணங்கள் நமது கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய தாயார், இன்று வெள்ளிக்கிழமை காலமான செய்தி அறிந்ததே. மரண வீட்டுக்கு பல்வேறு தரப்பினரும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
மஹிந்தவின் இல்லத்தில் நுழைய முற்பட்டவருக்கு விளக்க மறியல்

மஹிந்தவின் இல்லத்தில் நுழைய முற்பட்டவருக்கு விளக்க மறியல் 0

🕔22.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்தில் பலாத்காரமாக நுழைய முற்பட்ட நபரை, ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு, மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்குள் பலாத்காரமாக நுழைய முற்பட்ட ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரை இன்று வெள்ளிக்கிழமை கோட்டே நீதவான் நீதிமன்றில்

மேலும்...
காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

🕔22.Sep 2017

– சுஐப் எம் காசிம் – “மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை உறுதியாகவிருந்தார். எனினும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதாக உறுதியளித்தோர் இறுதி நேரத்தில் தமது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கினர். இதனால் அந்தத் திருத்தத்தில் முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்கு ஓரளவேனும்

மேலும்...
கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம்

கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம் 0

🕔22.Sep 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள், இன்னும் சில நாட்களில் கலையவுள்ள நிலையில், அவற்றின் நிருவாகம் – ஆளுநர்களின் கீழ் கொண்டு வரப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் முதலாவது கூட்டம் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வகையில்,

மேலும்...
கொழும்பு கொம்பனித் தெருவில், மூன்று குண்டுகள் கண்டுபிடிப்பு

கொழும்பு கொம்பனித் தெருவில், மூன்று குண்டுகள் கண்டுபிடிப்பு 0

🕔22.Sep 2017

கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மூன்று குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. வோக்சல் வீதியில் அமைந்துள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வாகனத் தரிப்பிடத்தில், இந்தக் குண்டுகள் காணப்பட்டுள்ளன. வட்டமாக கொங்றீட் இடப்பட்ட பகுதியிலிருந்து மேற்படி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குண்டுகளை செயலிழக்கும் படையினர், குறித்த இடத்துக்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
மு.கா. தலைவரின் தாயார் காலமானார்; ஜனாஸா நல்லடக்கம் நாளை

மு.கா. தலைவரின் தாயார் காலமானார்; ஜனாஸா நல்லடக்கம் நாளை 0

🕔22.Sep 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று வௌ்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.ஜனாஸா, நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு 20/1, அல்பேட் பிளேஸ், கொள்ளுப்பிட்டி, கொழும்பு என்ற முகவரியிலுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய வாசஸ்தலத்தில் இருந்து, கொழும்பு 07, ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடிக்கு

மேலும்...
மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு

மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு 0

🕔22.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, 3000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஊடகவியலாளர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்தபோது, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “பல நாடுகளுடன் சேர்ந்து தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த சதியில் ஈடுபட்டனர். இதற்காக அமெரிக்காவுடன்

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்களை, மார்ச் மாதம் நடத்த முடியும்: அமைச்சர் பைசர் முஸ்தபா நம்பிக்கை

மாகாண சபைத் தேர்தல்களை, மார்ச் மாதம் நடத்த முடியும்: அமைச்சர் பைசர் முஸ்தபா நம்பிக்கை 0

🕔22.Sep 2017

மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் என்று உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் சீர்திருத்தச் சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை அமைச்சில் இடம்பெற்றபோது, இதனைக் கூறினார். புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாண சபைகளுக்கான தேர்தல் தொகுதிவாரியாரியாக 50 வீதமும், வீதாசார

மேலும்...
08 கோடி 80 லட்சம் ரூபாய் பணக் கடத்தல் முறியடிப்பு; துபாய் செல்லவிருந்த தெமட்டகொட இளம் ஜோடி கைது

08 கோடி 80 லட்சம் ரூபாய் பணக் கடத்தல் முறியடிப்பு; துபாய் செல்லவிருந்த தெமட்டகொட இளம் ஜோடி கைது 0

🕔22.Sep 2017

இலங்கையிலிருந்து 8.8 கோடி ரூபாய் பெறுமதியான பணத்தை துபாய்க்கு கடத்த முற்பட்ட இளம் ஜோடி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். குறித்த ஜோடியினர், விமான நிலையத்தின் விசேட வழி ஊடாக தமது பொதிகளுடன் செல்ல முயற்சித்த போது, சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்ட சமயம் சிக்கிக் கொண்டனர் என்று, சுங்க பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான

மேலும்...
நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டங்களைக் கொண்டுவந்து, இறைமையை அரசாங்கம் அழிக்கிறது: மஹிந்த விசனம்

நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டங்களைக் கொண்டுவந்து, இறைமையை அரசாங்கம் அழிக்கிறது: மஹிந்த விசனம் 0

🕔21.Sep 2017

பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு நல்லாட்சி அரசாங்கம்  சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்து வருகிறது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் 20 வருட அரசியல் வாழ்வின் பூர்த்தியையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு

மேலும்...
மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம்: கலப்பு முறையில் மாற்றம்

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம்: கலப்பு முறையில் மாற்றம் 0

🕔21.Sep 2017

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் வேட்பாளர்களின் நியமனமானது தொகுதிவாரியாக 60 வீதமும், வீதாசார ரீதியாக 40 வீதமும் அமைந்திருத்தல் வேண்டும் எனும் நிபந்தனையானது, 50:50 என திருத்தப்பட்டுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இதுவரையில் வீதாசார முறையில் நடைபெற்று வந்த

மேலும்...
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார்

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார் 0

🕔21.Sep 2017

புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார். புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்படி அறிக்கையினை இன்று வியாழக்கிழமை காலை சமர்ப்பித்தார்.புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை, இன்று காலை 09.30 மணிக்கு பேரவையின் தலைவர் கரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்