மஹிந்தவின் இல்லத்தில் நுழைய முற்பட்டவருக்கு விளக்க மறியல்

🕔 September 22, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்தில் பலாத்காரமாக நுழைய முற்பட்ட நபரை, ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு, மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்குள் பலாத்காரமாக நுழைய முற்பட்ட ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இவரை இன்று வெள்ளிக்கிழமை கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்