நுரைச்சோலை வீடுகளை பகிர்ந்தளிக்கும் முயற்சி: சட்ட மா அதிபர், முன்னாள் அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி அழைப்பு

🕔 September 25, 2017

ம்பாறை மாவட்டம் – நுரைச்சோலை சுனாமி வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில், சட்ட மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஆகியோரை இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்படி வீடுகளை பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரியிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று விடுத்த வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ஜனாதிபதி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுரைச்சோலை பகுதியில்  நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 வீடுகளும், சட்டச் சிக்கல் காரணமாக பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளன.

சஊதி அரேபியாவின் அரச சார்பற்ற நிறுவனமொன்று, இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியினை வழங்கியிருந்தது.

2009ஆம் ஆண்டு மேற்படி வீடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருந்த போதும், இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்