பசீரும் ஹக்கீமும்: பகைமைக்கு வெளியே…

🕔 September 23, 2017

– அஹமட் –

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தும் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள். சில வருடங்களாக இருவருக்குள்ளும் நிலவி வந்த முரண்பாடுகள், இப்போது பகையாகியிருக்கின்றது.

மு.கா. தவிசாளர் பதவியிலிருந்து பசீரை ஹக்கீம் விலக்குமளவுக்கும், மு.கா. தலைவர் பதவியிலிருந்து ஹக்கீமை விரட்டியடிப்பேன் என்று பசீர் சபதமெடுக்கும் அளவுக்கும், அந்தப் பகைமை இப்போது உச்சம் தொட்டிருக்கிறது.

ஆனாலும், ஒரு காலகட்டத்தில் ஹக்கீமும் பசீரும் குடும்ப நண்பர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹக்கீமுடைய தாயார் இன்று காலமானதையடுத்து, ஹக்கீமுடைய வீட்டுக்கு பசீர் சென்று ஹக்கீமுடன் துயர் பகிர்ந்து கொண்டார்.

இந்த நேரத்தில் ஒரு விடயம் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது.

மு.கா. தலைவர் ஹக்கீம் – தனது தாயார் முன்னிலையில் பசீரை வைத்து, தாய் மீது ஆணையிட்டு, சில வருடங்களுக்கு முன்னர் பசீருக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்திருந்தார்.

பசீருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தருவேன் என்பதுதான் அந்த சத்தியமாகும்.

ஆனாலும், ஹக்கீம் அந்த சத்தியத்தை நிறைவேற்றவில்லை. பசீரும் இன்றுவரை ஒரு தடவையேனும் ஹக்கீமிடம் அதுபற்றிக் கேட்கவேயில்லை.

என்றாலும், தாய் போன்ற ஒருவரின் மரணத்தில் இவ்வாறான கசப்புக்களையெல்லாம் மீட்டிப் பார்த்து விலகியிருக்க முடியாது. அது மனிதப் பண்புமல்ல.

பசீர் நல்ல மனிதர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்