மாகாண சபைத் தேர்தல்களை, மார்ச் மாதம் நடத்த முடியும்: அமைச்சர் பைசர் முஸ்தபா நம்பிக்கை

🕔 September 22, 2017

மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் என்று உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் சீர்திருத்தச் சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை அமைச்சில் இடம்பெற்றபோது, இதனைக் கூறினார்.

புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாண சபைகளுக்கான தேர்தல் தொகுதிவாரியாரியாக 50 வீதமும், வீதாசார அடிப்படையில் 50 வீதமுமாக நடைபெறும் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, விரைவில் அதற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்படும் என்றும், அந்தக் குழுவில் சகல சமூக்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 07 பேர் நியமிக்கப்படுவர் எனவும் அமைச்சர் கூறினார்.

அந்த  ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதும், வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும், அதனையடுத்து மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில், எதிர்வரும் மார்ச் மாதமளவில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்