ஹக்கீம் வீட்டில் மஹிந்த; அரசியல் கணக்குகளுக்கு அப்பால்…

🕔 September 22, 2017

– அஹமட் –

‘பிணத்திலும் அரசியல் செய்கின்றவர்கள்’ வாழுகின்ற காலமிது. ஆனால், எல்லோரும் அப்படியல்ல என்பதற்கு அடிக்கடி நல்ல உதாரணங்கள் நமது கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய தாயார், இன்று வெள்ளிக்கிழமை காலமான செய்தி அறிந்ததே. மரண வீட்டுக்கு பல்வேறு தரப்பினரும் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மரண வீட்டுக்குச் சென்று, ரஊப் ஹக்கீமுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டதோடு, ஹக்கீம் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

மரண வீடுகளுக்குச் செல்வதைக் கூட, தமது அரசியலுக்கு லாபமாக அமையுமா? அல்லது நஷ்டத்தை ஏற்படுத்தி விடுமா என்று கணக்குப் போட்டுப் பார்த்து விட்டு, முடிவு செய்கின்றவர்களுக்கு மத்தியில், மஹிந்த ராஜபக்ஷ ‘உயர்ந்த’ ஒரு மனிதராகவே தெரிகிறார்.

சில விடயங்களில் அரசியலை உரசிப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

மரணத்திலும் அரசியல் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இது புரியாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்