மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு

🕔 September 22, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, 3000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்தபோது, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“பல நாடுகளுடன் சேர்ந்து தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த சதியில் ஈடுபட்டனர்.

இதற்காக அமெரிக்காவுடன் சேர்ந்து 3000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதற்கான பணம் சிங்கபூரில் வைத்து, கைமாறியது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு இதில் பெரும் பங்குள்ளது. அவருடைய தொடர்புகள் மூலமே ஐ.தே.கட்சி இதனை மேற்கொண்டது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்