Back to homepage

பிரதான செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் நீடிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் நீடிப்பு 0

🕔7.Oct 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்கமறியல் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்தது. அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டு; ராஜாங்க அமைச்சர் பௌசியை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு

ஊழல் குற்றச்சாட்டு; ராஜாங்க அமைச்சர் பௌசியை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு 0

🕔7.Oct 2016

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லஞ்சல் ஊழல் ஆணைக்குழு, ராஜாங்க அமைச்சர் பௌசிக்கு எதிராக, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பிலேயே, அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனர்த முகாமைத்துவ

மேலும்...
ஜனாதிபதி தாய்லாந்து பயணம்

ஜனாதிபதி தாய்லாந்து பயணம் 0

🕔7.Oct 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, இன்று வெள்ளிக்கிழமை தாய்லாந்துக்குபயணமானார். ஆசிய பிராந்திய பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தாய்லாந்து சென்றுள்ளார். எதிர்வரும் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. பாங்கொக் நகரில் இடம்பெறும் இம் மாநாட்டில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ்,

மேலும்...
வரவு – செலவு நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம், நொவம்பர் மாதம் சபைக்கு வருகிறது

வரவு – செலவு நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம், நொவம்பர் மாதம் சபைக்கு வருகிறது 0

🕔7.Oct 2016

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம், எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் முறை வாசிப்பு, நொவம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் டிசம்பர் 10 ஆம் திகதி

மேலும்...
கிழக்கு மாகாணசபையில், அணி மாறினார் அமீர்

கிழக்கு மாகாணசபையில், அணி மாறினார் அமீர் 0

🕔7.Oct 2016

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சி பக்கமாக இருந்து வந்த மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டார். கிழக்கு மாகாண சபையின் 64ஆவது அமர்வு, நேற்றைய தினம் –  தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர்,

மேலும்...
ராஜா என்றவர்கள், ஓநாய் என்கிறார்கள்: மஹிந்த ராஜபக்ஷவின் கவலை

ராஜா என்றவர்கள், ஓநாய் என்கிறார்கள்: மஹிந்த ராஜபக்ஷவின் கவலை 0

🕔3.Oct 2016

முன்னர் தன்னை பலமிக்க ராஜா என்று அழைத்தவர்கள், இப்போது  ஓநாய் என அழைக்கிறார்கள் எனக்கூறி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். வெலிகம பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “நாங்கள் முன்பு ஆரம்பித்து வைத்திருந்த அபிவிருத்தி திட்டங்களையே, தற்போதைய அரசாங்கம்

மேலும்...
முஸ்லிம் அரசியல் கட்சிகள், ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் றிசாத்

முஸ்லிம் அரசியல் கட்சிகள், ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் றிசாத் 0

🕔3.Oct 2016

  அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமுதாய நலனுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளும், உலமாக்களும், புத்திஜீவிகளும், இணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மாத்தளை, உக்குவெல உம்மு சலாமா பெண்கள் அரபுக்கல்லூரியின்

மேலும்...
சீனா செல்ல, கோட்டாவுக்கு அனுமதி

சீனா செல்ல, கோட்டாவுக்கு அனுமதி 0

🕔3.Oct 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு பிரம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை வழங்கியுள்ளது. அவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தின் ஊடாக, இலங்கை அரசாங்கத்துக்கு பலகோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக கூறி தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கில், கோட்டா உள்ளிட்ட எட்டு பேருக்கு, கடந்த வாரம் பிணை வழங்கப்பட்ட அதேவேளை, அவர்கள் வெளிநாடு செல்வதற்கும்

மேலும்...
ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தெரிவிப்பு

ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தெரிவிப்பு 0

🕔3.Oct 2016

தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பிரித்தானியாவிலிருந்து செப்டம்பர் 30ம் திகதி சென்னை வந்த  ரிச்சர்ட் பியலே என்ற மருத்துவ நிபுணரின் கருத்தையும் அப்பல்லோ மருத்துவமனை பெற்றுள்ளது. முதலமைச்சரை பரிசோதித்த மருத்துவர்

மேலும்...
இறைவனின் உதவியுடன் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றேன்: அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

இறைவனின் உதவியுடன் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றேன்: அமைச்சர் றிசாத் பதியுத்தீன் 0

🕔2.Oct 2016

  – சுஐப் எம். காசிம் –  மக்களை மீளக்குடியேற்றுவதில் – தான் எதிர்நோக்கும் கஷ்டங்களும், அவமானங்களும் அனேகமானவை என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். “றிசாத் பதியுத்தீன் காடுகளை நாசமாக்குகின்றார், இயற்கை வளங்களை சூறையாடுகின்றார், வில்பத்துவுக்குள் வாழைத் தோட்டம் வைத்துள்ளார் என்றெல்லாம் என்மீது குற்றச்சாட்டுக்களை இனவாதிகள் அடுக்கிக்கொண்டே போகின்றனர். மக்களுக்கு உதவி செய்வதனால் எனக்கு இவ்வாறான பழிச்சொற்கள்

மேலும்...
கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது, கைக்குண்டுத் தாக்குதல்

கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது, கைக்குண்டுத் தாக்குதல் 0

🕔2.Oct 2016

பாதாள உலகத் தலைவர் ஒருவரை அதுருகிரிய பகுதியில் பொலிஸார் கைது செய்ய முயற்சித்த போது, குறித்த நபர் – பொலிஸார் மீது கைக்குண்டு ஒன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதுருகிரிய பிரதேசத்தில் அர்ஜுன் என்று நன்கு அறியப்பட்ட பாதாள உலகத் தலைவர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். குறித்த

மேலும்...
தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு

தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔1.Oct 2016

தன்னுடைய தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக, முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். எவ்வாறாயினும், தொலைபேசி உரையாடல்களில் கூட – தான் ஒளிவு மறைவின்றிப் பேசுவதனால், அதனை ஒட்டுக் கேட்பது தொடர்பில் தனக்குப் பிரச்சினையில்லை என்றும் அவர் கூறினார். அவன் கார்ட் விவகாரம் தொடர்பான வழக்கில் நேற்று வெள்ளிக்கிழமை, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக

மேலும்...
அட்டாளைச்சேனையில் இரத்த தான நிகழ்வு

அட்டாளைச்சேனையில் இரத்த தான நிகழ்வு 0

🕔1.Oct 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரத்ததான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பிரதேசத்தில் இயங்கிவரும் ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பின் வளாகத்தில் அமையப்பெற்றுள்ள ஹன்ழலா பின் ஆமிர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பானது,

மேலும்...
காயப்பட்ட நிலையில் நாமல் ராஜபக்ஷ, வைத்தியசாலையில் அனுமதி

காயப்பட்ட நிலையில் நாமல் ராஜபக்ஷ, வைத்தியசாலையில் அனுமதி 0

🕔1.Oct 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தங்கல்லையில் சிறுவர் தின நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, உதைப் பந்து விளையாடியபோதே, இவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புருவப் பகுதியில் ஏற்பட்ட காயமொன்றுக்காகவே, இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சிகிச்சைகளுக்குப் பின்னர், இவர் தங்கல்லையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளதாகத் தெரியவருகிறது. நாமல் ராஜபக்ஷவுக்கு சிகிச்சையளிக்கும்

மேலும்...
சிறுவர், முதியோர் தொடர்பில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்: இணைத் தலைவர் மன்சூர்

சிறுவர், முதியோர் தொடர்பில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்: இணைத் தலைவர் மன்சூர் 0

🕔1.Oct 2016

– றிஜாஸ் அஹமட் – “உங்களில் சிறியோருக்கு அன்பு காட்டாதவரும், முதியோருக்கு மரியாதை செலுத்தாதவரும் என்னை சார்ந்தவர் அல்ல”  என்கிற நபிமொழியினூடாக,  சிறுவர் மற்றும் முதியோர் தொடர்பான பெறுமானத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். ஒக்டோபர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்