ஊழல் குற்றச்சாட்டு; ராஜாங்க அமைச்சர் பௌசியை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு

🕔 October 7, 2016

z_p04-no-communalதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லஞ்சல் ஊழல் ஆணைக்குழு, ராஜாங்க அமைச்சர் பௌசிக்கு எதிராக, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பிலேயே, அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு வழங்கப்பட்ட வாகனத்தை, தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தியதாக, ராஜாங்க அமைச்சர் பௌசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில், மேற்படி வாகனத்தை அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

19.5 மில்லியன் பெறுமதியான வாகனமொன்றினையே, பௌசி இவ்வாறு பயன்படுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்