சீனா செல்ல, கோட்டாவுக்கு அனுமதி

🕔 October 3, 2016

Gottabaya - 0987பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு பிரம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை வழங்கியுள்ளது.

அவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தின் ஊடாக, இலங்கை அரசாங்கத்துக்கு பலகோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக கூறி தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கில், கோட்டா உள்ளிட்ட எட்டு பேருக்கு, கடந்த வாரம் பிணை வழங்கப்பட்ட அதேவேளை, அவர்கள் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு, கடவுச்சீட்டுகள் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டன.

இந்த நிலையில் சீனாவில் நடைபெறவுள்ள பாதுகாப்பு தொடர்பான செயலமர்வில் கலந்து கொள்ளுமாறு கோட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த மாநாட்டில் கோட்டா கலந்துகொள்ள வேண்டியுள்ளதாகவும், கோட்டா சார்வில் ஆஜரான சட்டத்தரணி வாதிட்டார். ஆயினும்,  இன்று 03 ஆம் திகதி அது தொடர்பில் அறிவிக்கப்படும் என்று, கடந்தவாரம் மன்று அறிவித்திருந்தது.

இதற்கிணங்க இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, வெளிநாடு செல்வதற்கான அனுமதியினை கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய வழங்கினார்.

அந்தவகையில், எதிர்வரும் 05ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிவரை சீனாவில் நடைபெறும் மேற்படி செயலமர்வில் –  கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்