காயப்பட்ட நிலையில் நாமல் ராஜபக்ஷ, வைத்தியசாலையில் அனுமதி
🕔 October 1, 2016


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தங்கல்லையில் சிறுவர் தின நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, உதைப் பந்து விளையாடியபோதே, இவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
புருவப் பகுதியில் ஏற்பட்ட காயமொன்றுக்காகவே, இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சிகிச்சைகளுக்குப் பின்னர், இவர் தங்கல்லையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளதாகத் தெரியவருகிறது.
நாமல் ராஜபக்ஷவுக்கு சிகிச்சையளிக்கும் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

