வரவு – செலவு நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம், நொவம்பர் மாதம் சபைக்கு வருகிறது
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம், எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் முறை வாசிப்பு, நொவம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை வாசிப்பின் மீதான விவாதங்கள் நடைபெற்ற பின்னர், வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சம்பந்தமான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு அமைச்சரவை கடந்த 04 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது