ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தெரிவிப்பு

🕔 October 3, 2016

Jaya lalitha - 097மிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

பிரித்தானியாவிலிருந்து செப்டம்பர் 30ம் திகதி சென்னை வந்த  ரிச்சர்ட் பியலே என்ற மருத்துவ நிபுணரின் கருத்தையும் அப்பல்லோ மருத்துவமனை பெற்றுள்ளது.

முதலமைச்சரை பரிசோதித்த மருத்துவர் ரிச்சர்ட், பல்வேறு சிகிச்சை அறிக்கைகைளையும் ஆய்வு செய்து, மருத்துவ நிபுணர்களோடு விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் பொருத்தமான நோய் தொற்று மருந்துகள் வழங்கப்படுவதாகவும், பிற சிகிச்சை நடவடிக்கைகளோடு முதலமைச்சரின் நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியியு்ள்ளது.

வழங்கப்படும் சிகிச்சைக்கு நல்லவிதமாக மாறுதல்கள் தெரிவதாகவும், இன்னும் சில நாட்கள் முதலமைச்சர் ஜெயலலிதாக மருத்துவமனையில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்