ஜனாதிபதி தாய்லாந்து பயணம்

🕔 October 7, 2016

Maithiri - 012னாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, இன்று வெள்ளிக்கிழமை தாய்லாந்துக்குபயணமானார்.

ஆசிய பிராந்திய பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தாய்லாந்து சென்றுள்ளார். எதிர்வரும் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

பாங்கொக் நகரில் இடம்பெறும் இம் மாநாட்டில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஈரான் உள்ளிட்ட 34 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

தாய்லாந்து விஜயத்தை நிறைவுசெய்து கொண்டு,  எதிர்வரும் 14ஆம் திகதி இந்தியாவில் இடம்பெறவுள்ள விசேட பொருளாதார மாநாடு ஒன்றிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்