Back to homepage

மேல் மாகாணம்

பெண்கள் 06 பேர் உட்பட, 285 சிறைக் கைதிகள் இன்று விடுதலை

பெண்கள் 06 பேர் உட்பட, 285 சிறைக் கைதிகள் இன்று விடுதலை 0

🕔8.Jan 2017

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 285 கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றமையினை சிறப்பிக்கும் வகையில், நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 06 பேர் பெண்களாவர். குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ், சிறிய குற்றங்களைப் புரிந்தவர்களே இவ்வாறு, ஜனாதிபதியின் மன்னிப்பின்

மேலும்...
ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து

ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து 0

🕔7.Jan 2017

– க. கிஷாந்தன் – கினிகத்தேன – அம்பகமுவ பிரதேச பகுதியில் இன்று  சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வீட்டில்  இருந்த  05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். ஆயினும், வீடு எரிவதை கண்டு இவர்கள் கூச்சலிட்டதாகவும்,

மேலும்...
தாஜுத்தீன் பயணித்த வாகனத்தில், அடையாளம் தெரியாத நபர் இருந்தார்: நீதிமன்றில் தெரிவிப்பு

தாஜுத்தீன் பயணித்த வாகனத்தில், அடையாளம் தெரியாத நபர் இருந்தார்: நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔6.Jan 2017

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுத்தின் படுகொலை செய்யப்பட்ட நாளன்று, அவருடைய வாகனத்தின் பின் இருக்கையில் அடையாளம் தெரியாத நபரொருவர் பயணித்ததாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் – டிலான் ரத்நாயக்க, இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார். விசாரணைகள் மூலம் இவ்விடயம் தெரியவந்ததாகவும் அவர் இதன்போது கூறினார். இதேவேளை, குறித்த நபரை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்

மேலும்...
பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா

பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா 0

🕔6.Jan 2017

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஸ்ரீ ஹெட்டிகே ராஜிநாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையின் தலைவர் சபாநாயகர் கரு  ஜயசூரியவுக்கு 10 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளார். ஆயினும், இவருடைய ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்புச் சபை பொறுப்பேற்றுக் ஏற்றுக் கொண்டமை பற்றி, இதுவரை அறிவிக்கவில்லை என்று, பேராசிரியர் ஹெட்டிகே தெரிவித்துள்ளார். ஜேர்மனியிலுள்ள

மேலும்...
வில்பத்து விவகாரத்தில் ஒழித்தோடிய மு.கா; முசலி முஸ்லிம்களை பழி தீர்த்தது

வில்பத்து விவகாரத்தில் ஒழித்தோடிய மு.கா; முசலி முஸ்லிம்களை பழி தீர்த்தது 0

🕔5.Jan 2017

– முசலி ஹசன் – வில்பத்துவில் முஸ்லிம்கள் காடழித்துக் குடியேறுவதாக கூறும் இனவாதிகளுக்கு அதன் உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று வியாழக்கிழமை, முஸ்லிம் தலைமைகள் ஒன்று கூடி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பினை மு.காங்கிரஸ் பகிஸ்கரித்துள்ளது. இதன் காரணமாக, முசலி முஸ்லிம்களை – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பழிவாங்கியுள்ளது. “வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு” எனும் தலைப்பில்

மேலும்...
அம்பியுலன்ஸில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட துமிந்தவுக்கு, இறங்க முடியவில்லையாம்; வழக்கு ஒத்தி வைப்பு

அம்பியுலன்ஸில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட துமிந்தவுக்கு, இறங்க முடியவில்லையாம்; வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔5.Jan 2017

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்துக்கு அம்பியுலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட முன்னாள் நாடாமன்ற உறுப்பினரும், மரண தண்டனைக் கைதியுமான துமிந்த சில்வா, அம்பியுலன்ஸ் வாகனத்திலிருந்து இறங்க முடியாதவாறு சுகயீனமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது. இதேவேளை, துமிந்த சில்வாவின் மருத்துவ அறிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு

மேலும்...
முஸ்லிம்களின் புண்களுக்கு புனுகு பூச, ஆள் தேவையில்லை: மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்

முஸ்லிம்களின் புண்களுக்கு புனுகு பூச, ஆள் தேவையில்லை: மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் 0

🕔5.Jan 2017

வில்பத்து வனப் பகுதியினை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு மிகத் தெளிவாக உத்தரவிட்ட பிறகு, அதனால் பாதிக்கப்படவுள்ள முஸ்லிம்களின் புண்களுக்கு, அமைச்சர் ராஜித சேனாரத்ன புனுகு தடவுவதால் எதுவும் நடந்து விடப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் ஆறுதல் சொல்லத்

மேலும்...
ஐ.தே.கட்சிக்குள் உயர்கிறார் பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா

ஐ.தே.கட்சிக்குள் உயர்கிறார் பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா 0

🕔5.Jan 2017

பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, ஐக்கிய தேசியக் கட்சி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழுவில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று புதன்கிழமை, அந்தக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கூடியது. ஐ.தே.கட்சிக்குள் தற்போது காணப்படும் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாகவே, இந்த துணைச் செயலாளர்

மேலும்...
முகம்மட் சியாம் கொலை வழக்கு சிறைக் கைதி, பட்டம் பெறுகிறார்: இலங்கையில் வரலாற்றுச் சாதனை

முகம்மட் சியாம் கொலை வழக்கு சிறைக் கைதி, பட்டம் பெறுகிறார்: இலங்கையில் வரலாற்றுச் சாதனை 0

🕔5.Jan 2017

வெலிக்கட சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனைக் கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கலைமானிப் பட்டம் பெறவுள்ளார். பிரபல வர்த்தகர் பம்பலப்பிட்டி முகம்மட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் பொலிஸ் உப பரிசோதகர் லக்மினி இந்திக பமுனுசிங்க என்பவரே இன்று பட்டம் பெறுகிறார். இலங்கையில்

மேலும்...
கொழும்பு – பதுளை ரயிலில் குண்டு; தகவல் வழங்கிய பெண் கைது

கொழும்பு – பதுளை ரயிலில் குண்டு; தகவல் வழங்கிய பெண் கைது 0

🕔4.Jan 2017

கொழும்பிலிருந்து பதுளை செல்விருந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக, 119 தொலைபேசி இலக்கம் மூலம் – அவசர பிரிவு பொலிசாரைத் தொடர்பு கொண்டு பொய்யான தகவலை வழங்கினார் எனும் குற்றச்சாட்டில், இன்று புதன்கிழமை பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதியாவார். நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து பதுளைக்கு மாலை

மேலும்...
வில்பத்துவில் காடழிப்பு இடம்பெறவில்லை; றிசாத் சரியாகவே செயற்படுகிறார்: அமைச்சர் ராஜித உறுதி

வில்பத்துவில் காடழிப்பு இடம்பெறவில்லை; றிசாத் சரியாகவே செயற்படுகிறார்: அமைச்சர் ராஜித உறுதி 0

🕔4.Jan 2017

  – சுஐப் எம் காசிம் – வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லையென்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வில்பத்து சரணாலயத்தை அவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை அமைத்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பிழையானதெனவும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பில்

மேலும்...
அரசாங்கம் மீது அதிருப்தி: முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அரசாங்கம் மீது அதிருப்தி: முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔3.Jan 2017

– சுஐப் எம் காசிம் – வில்பத்து சரணாலயத்தை விரிவு படுத்தி, வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை கைவிட வேண்டுமென அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் தலைமையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் தேசிய கவுன்ஸில் மற்றும் தேசிய ஷூரா சபையினர் கலந்து கொண்ட கூட்டத்தில்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை; மௌனத்தால் உறுதிப்படுத்தினார் ஹக்கீம்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை; மௌனத்தால் உறுதிப்படுத்தினார் ஹக்கீம் 0

🕔3.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குமாறு, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் கடுமையாக வலியுறுத்திய போதும், அது குறித்து மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் எதுவும் கூறாமல் மௌமாக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
ஹனலிக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் அறிவிப்பு: பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தேன் எனவும் தெரிவிப்பு

ஹனலிக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் அறிவிப்பு: பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தேன் எனவும் தெரிவிப்பு 0

🕔3.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்கு, தான் தீர்மானித்துள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, ஹக்கீம் இந்த விடயத்தினைக் கூறினார். செயலாளர் பதவி தொடர்பில் ஹசனலியுடன் ஏற்பட்ட பிரச்சினையை

மேலும்...
யோசிதவின் காதலிக்கு, நீதமன்றம் அபராதம்

யோசிதவின் காதலிக்கு, நீதமன்றம் அபராதம் 0

🕔2.Jan 2017

யோசித ராஜபக்ஷவின் காதலியும், நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தயின் மகளுமான யோஹான ரத்வத்தவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அதனகல நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இவருக்கு 05 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 22 வயதான இவர் அண்மையில் சில இளம் பெண்களுடன், கறுப்பு நிறத்திலான டிபென்டர் வாகனம் ஒன்றில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்