ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து
– க. கிஷாந்தன் –
கினிகத்தேன – அம்பகமுவ பிரதேச பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். ஆயினும், வீடு எரிவதை கண்டு இவர்கள் கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதேவேளை இது தொடர்பாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்துக்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.