யோசிதவின் காதலிக்கு, நீதமன்றம் அபராதம்

🕔 January 2, 2017

yohana-011யோசித ராஜபக்ஷவின் காதலியும், நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தயின் மகளுமான யோஹான ரத்வத்தவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அதனகல நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இவருக்கு 05 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

22 வயதான இவர் அண்மையில் சில இளம் பெண்களுடன், கறுப்பு நிறத்திலான டிபென்டர் வாகனம் ஒன்றில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளார்.

இதன்போது போக்குவரத்து சட்டத்தை மீறியதுடன், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்போது தான் குறித்த அரசியல்வாதியின் மகள் எனவும், சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் அவரது வாகன அனுமதி பத்திரம் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டதுடன், இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்புபட்ட செய்தி: பிரபல அரசியல்வாதியின் மகளை, துரத்திப் பிடித்த பொலிஸார்; கொழும்பு – கண்டி வீதியில் சம்பவம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்