கொழும்பு – பதுளை ரயிலில் குண்டு; தகவல் வழங்கிய பெண் கைது

🕔 January 4, 2017

Train - 987கொழும்பிலிருந்து பதுளை செல்விருந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக, 119 தொலைபேசி இலக்கம் மூலம் – அவசர பிரிவு பொலிசாரைத் தொடர்பு கொண்டு பொய்யான தகவலை வழங்கினார் எனும் குற்றச்சாட்டில், இன்று புதன்கிழமை பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதியாவார்.

நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து பதுளைக்கு மாலை 8.00 மணிக்கு புறப்படவிருந்த ரயிலில், வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அவசர பொலிஸ் இலக்கத்துக்கு குறித்த பெண் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், உரிய இடத்துக்கு வந்த விசேட அதிரடிப்படையினர், ரயிலிருந்து பயணிகளை வெளியேற்றியதோடு, புகையிரத நிலையத்திலிருந்தும் ரயிலை வெளியேற்றியிருந்தனர்.

இதன் பின்னர் படையினர் சோதனைகளை மேற்கொண்ட போதும், அங்கு எதுவித வெடி குண்டுகளும் காணப்படவில்லை.

இந்த நிலையிலேயே, பொய்யான தகவலை வழங்கியதாக, குறித்த பெண் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

ஆயினும், தான் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவித்த பின்னர், வெடி குண்டினை சிலர் கொண்டு சென்று விட்டதாக, கைது செய்யப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்