தாஜுத்தீன் பயணித்த வாகனத்தில், அடையாளம் தெரியாத நபர் இருந்தார்: நீதிமன்றில் தெரிவிப்பு

🕔 January 6, 2017

Thajudeen - 0987பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுத்தின் படுகொலை செய்யப்பட்ட நாளன்று, அவருடைய வாகனத்தின் பின் இருக்கையில் அடையாளம் தெரியாத நபரொருவர் பயணித்ததாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் – டிலான் ரத்நாயக்க, இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார்.

விசாரணைகள் மூலம் இவ்விடயம் தெரியவந்ததாகவும் அவர் இதன்போது கூறினார்.

இதேவேளை, குறித்த நபரை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மன்றுக்குத் தெரிவித்தார்.

இந்த நிலையில், வசீம் தாஜுதீன் கொலையுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்களான, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொட்ஸ்கி உத்தரவிட்டார்.

Comments