பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா

🕔 January 6, 2017

sri-hettige-011தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஸ்ரீ ஹெட்டிகே ராஜிநாமா செய்துள்ளார்.

இவர் தனது ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையின் தலைவர் சபாநாயகர் கரு  ஜயசூரியவுக்கு 10 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளார்.

ஆயினும், இவருடைய ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்புச் சபை பொறுப்பேற்றுக் ஏற்றுக் கொண்டமை பற்றி, இதுவரை அறிவிக்கவில்லை என்று, பேராசிரியர் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராகக் கடமையாற்றும் பொருட்டு, தனது பதவியை இவர் ராஜினாமா செய்துள்ளதாக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பொலிஸ் ஆணைக்கழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக தொடர்ந்தும் செயற்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்