வில்பத்து விவகாரத்தில் ஒழித்தோடிய மு.கா; முசலி முஸ்லிம்களை பழி தீர்த்தது

🕔 January 5, 2017

vilpttu-slmc-011– முசலி ஹசன் –

வில்பத்துவில் முஸ்லிம்கள் காடழித்துக் குடியேறுவதாக கூறும் இனவாதிகளுக்கு அதன் உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று வியாழக்கிழமை, முஸ்லிம் தலைமைகள் ஒன்று கூடி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பினை மு.காங்கிரஸ் பகிஸ்கரித்துள்ளது.

இதன் காரணமாக, முசலி முஸ்லிம்களை – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பழிவாங்கியுள்ளது.

“வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று, இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.

முஸ்லிம் மீடியா போரம் கொழும்பில் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டுக்கு, முஸ்லிம் எம்பிக்கள் மற்றும் சமய, சமூக நிறுவனங்கள் ஆகியவை அழைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உட்பட அந்தக் கட்சியின் எம் பிக்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆயினும், அவர் இந்த நிகழ்வுக்கு வராமல் ஒழித்து ஓடிவிட்டனர்.

கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸை முசலி முஸ்லிம்கள் தோற்கடித்தமை காரணமாகவே, அந்த மக்களின் விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பினை முஸ்லிம் காங்கிரஸ் பகிஸ்கரித்து விட்டதென பேசிக்கொள்ளப்படுகின்றது.

வில்பத்து விவகாரத்தில் ஜனாதிபதி – தான் நினைத்தவாறு முடிவுகளை மேற்கொண்டிருப்பதாக, மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமும் பிரதியமைச்சர் ஹரீஸும் அறிக்கைகள் விடுகின்ற போதும், அது தொடர்பாக நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று  அங்கு வந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தமையைக் காணக் கிடைத்தது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் – கட்டாயம் வருகின்றாரென்ற நம்பிக்கையில் கொழும்பிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு சிலர், அவருக்காக காத்திருந்த போதும்; முசலியைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் வழமையான ஏமாற்றத்துடன் சென்றமையைக் காணக்கூடியதாக இருந்தது. இந்தக் கூட்டத்திற்கு முசலியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலி பாபா பாரூக் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் புதுமுகம் ஹுனைஸ் பாரூக் ஆகியோரும் வரவில்லை.

முஸ்லிம் சமூகப் பிரச்சினையொன்று தொடர்பாக, முஸ்லிம் சமூகக் கட்சியெனக் கூறிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொண்ட விதம் குறித்து, அங்கு வருகை தந்திருந்த சிவில்அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் விசனங்களைத் தெரிவித்தனர்.

இது ஒரு புறம் இருக்க,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வில்பத்து தொடர்பில் நடந்த கூட்டமொன்றுக்கு, வன்னி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் எம்.பி தன்னை அழைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால், இன்றைய கூட்டத்துக்கு முஸ்லிம் மீடியா போரம்  அழைத்திருந்த போதும், மஸ்தான் வரவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்